சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

Parigarangal Astrology Murugan
By Vidhya Senthil Mar 14, 2025 12:30 PM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in ஜோதிடம்
Report

 சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

 சரவணபவ

முருகன் என்றால் அழகன் என்று பொருள். ஓம் என்ற பிரணவத்தின் வடிவமாக நின்றவன் முருகன். தர்மத்தை நிலைநாட்ட வடிவம் கொண்டவன் முருகன். இவரின் சரவணபவ என்னும் 6 ஆறு எழுத்து மந்திரம் சிறப்பு மற்றும் பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! | Six Benefits Of Saravana Bhava

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் கடவுளின் பெயரைச் சொல்வதால் மனமும் முகமும் மலரும். ஆனந்தம் பெருகும். முருகனை நினைத்து நினைத்து அவனது பெயர்களை உள்ளம் நெகிழ்ந்து உருகிச் சொன்னால் ஆறுமுகக்கடவுள்.

சனி பெயர்ச்சி 2025..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் - உங்க ராசி இருக்கா தெரிஞ்சுக்கோங்க!

சனி பெயர்ச்சி 2025..கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் - உங்க ராசி இருக்கா தெரிஞ்சுக்கோங்க!

தன் பன்னிரண்டு கரங்களினால் நாம் வேண்டிய வரங்களை எல்லாம் வள்ளல் போல் அள்ளித் தருவான். சரவணபவன், முருகன், குமரன், கந்தன், குகன், வேலாயுதம், மயில்வாகனன், சேவல்கொடியோன் என்ற திருநாமங்கள் அடியார்களால் சொல்லப்படுபவை.

பலன்கள் 

இதில் "சரவணபவ' என்னும் ஆறெழுத்து மந்திரம்மிகவும் சிறப்பானதாகும். இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம், கல்வி, முக்தி (பிறப்பற்ற நிலை), எதிரிகளை வெல்லுதல், ஆரோக்கியம், பயமின்றி இருத்தல் ஆகிய ஆறு பேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது.

சரவணபவ என்றால் கிடைக்கும் ஆறு பலன்கள் - தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! | Six Benefits Of Saravana Bhava

"சரவணன்' என்றால் "பொய்கையில் நாணல் புல்களுக்கு மத்தியில் தோன்றியவன்' என்று பெயர். இதனால், முருகன் கோயில்களில் உள்ள தெப்பக்குளங்களை "சரவணப் பொய்கை என்பர்.