மக்களவை தேர்தல்: வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு - அலறியடித்து ஓடிய மக்கள்!
மணிப்பூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல்
மக்களவை தேர்தல் 2024 நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதியான இன்று தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அந்தவகையில் மணிப்பூரில் இரண்டு தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகின்றன. இதில், மணிப்பூர் மாநிலம் உள் மணிப்பூர் தொகுதியில் உள்ள தமான்போக்பி பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடியில் அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக துப்பாக்கிசூடு நடத்தினர்.
பெரும் பரபரப்பு
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டு, வாக்குச்சாவடியில் இருந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

இந்த வன்முறை சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
मणिपुर के मतदान केंद्रों पर गोलियां चल रही हैं सुरक्षा बल कहा है चुनाव आयोग?pic.twitter.com/8xqqxAbHot
— Puneet Kumar Singh (@puneetsinghlive) April 19, 2024
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil