தொடரும் மர்மம் - சல்மான் கான் வீட்டிற்கு துப்பாக்கி சூடு - கைதானவர் தற்கொலை
சல்மான் கான்
பாலிவுட் சினிமாவின் உச்சநடிகர் சல்மான் கான். தொடர்ந்து வரிசையான ஹிட் ஆக்சன் படங்களில் நடித்து வரும் அவருக்கு பாலிவுட்டை தாண்டி இந்தியாவின் பல இடங்களிலும் ரசிகர்கள் அதிகம். 58 வயதாகும் சல்மான் கான் இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.

ஆனால், இவருக்கும் பல நடிகைகளுக்கும் காதல் இருந்ததாக பல செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருந்தன. ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைஃப் போன்றவர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் சல்மான்.

ஆனாலும், அவருக்கு திருமணம் கைகூடவில்லை. மாஸ் ஆக்ஷன் ஹீரோ இமேஜ் கொண்டுள்ள சல்மான், தென்னிந்தியாவில் வெளியான பல ஹிட் படங்களை ரீமேக் செய்துள்ளார். அதில் சேது, போக்கிரி, உத்தமபுத்திரன், வீரம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்க ஆகும்.
தற்கொலை
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சல்மான் வீட்டின் அருகே கடந்த 14-ஆம் தேதி அதிகாலையில் துப்பாக்கி சூடு நடந்துள்ள சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக விக்கி குப்தா, சாகர் பால் என இருவரை கைது செய்த நிலையில், அவர்களுக்கு துப்பாக்கிகளை வழங்கியதாக அனுஜ் தபன், சோனு சுபாஷ் சந்தர் என்பவர்களை மும்பை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில், கைதான அனுஜ் தபன் சிறையிலேயே தற்கொலை முயற்சி செய்துள்ளார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் தற்கொலைக்கு காரணம் இன்னும் தெரியவில்லை.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
உயர்கல்வி வாய்ப்புகளை தவறவிட்ட மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்! அரசாங்கத்தின் புதிய திட்டம் IBC Tamil