சல்மான் கானுக்கு வெச்ச குறி..? அதிகாலையில் பைக்கில் வந்து துப்பாக்கி சூடு...அதிர்ந்த பாலிவுட்

Bollywood Salman Khan Mumbai
By Karthick Apr 14, 2024 04:10 AM GMT
Report

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான்

பாலிவுட் சினிமாவின் உச்சநடிகர் சல்மான் கான். தொடர்ந்து வரிசையான ஹிட் ஆக்சன் படங்களில் நடித்து வரும் அவருக்கு பாலிவுட்டை தாண்டி இந்தியாவின் பல இடங்களிலும் ரசிகர்கள் அதிகம்.

gun-firing-in-salman-khan-house-shocking-news

58 வயதாகும் சல்மான் கான் இதுவரை திருமணமே செய்து கொள்ளவில்லை. ஆனால், இவருக்கும் பல நடிகைகளுக்கும் காதல் இருந்ததாக பல செய்திகள் வெளிவந்து கொண்டே தான் இருந்தன.

gun-firing-in-salman-khan-house-shocking-news

ஐஸ்வர்யா ராய், கத்ரினா கைஃப் போன்றவர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் சல்மான். ஆனாலும், அவருக்கு திருமணம் கைகூடவில்லை. மாஸ் ஆக்ஷன் ஹீரோ இமேஜ் கொண்டுள்ள சல்மான், தென்னிந்தியாவில் வெளியான பல ஹிட் படங்களை ரீமேக் செய்துள்ளார். அதில் சேது, போக்கிரி, உத்தமபுத்திரன், வீரம் போன்ற படங்கள் குறிப்பிடத்தக்க ஆகும்.

முன்னாள் காதலன் செய்த செயல்..உடைந்து விட்டேன் - வேதனையுடன் சொன்ன வித்யா பாலன்

முன்னாள் காதலன் செய்த செயல்..உடைந்து விட்டேன் - வேதனையுடன் சொன்ன வித்யா பாலன்

துப்பாக்கி சூடு 

தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சல்மான் வீட்டின் அருகே அதிகாலையில் துப்பாக்கி சூடு நடந்துள்ள சம்பவம் பாலிவுட் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

gun-firing-in-salman-khan-house-shocking-news

மும்பை பந்த்ரா பகுதியில் வசித்து வரும் சல்மான் வீட்டிற்கு அதிகாலை 5 மணியளவில், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு தப்பித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி, துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை தேடி வருகின்றனர்.