முன்னாள் காதலன் செய்த செயல்..உடைந்து விட்டேன் - வேதனையுடன் சொன்ன வித்யா பாலன்

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகை வித்யா பாலன் தனது கசப்பான காதல் அனுபவங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
வித்யா பாலன்
2005-ம் ஆண்டு வெளியான 'பிரினீதா' என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தென்னிந்திய நடிகையான வித்யா பாலன், தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வளம் வருகிறார்.
குறிப்பாக மறைந்த கவர்ச்சி பட நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவான "Dirty Picture" படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நாடு முழுவதும் கவனம் பெற்றார்.
இப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வித்யா பாலன் வென்றார். தமிழில் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
ஏமாற்றப்பட்டேன்
இவர் தனது கசப்பான காதல் அனுபவங்களை குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, நான் ஏமாற்றப்பட்டேன். என்னுடைய முதல் காதலன் என்னை ஏமாற்றிவிட்டான்.
நான் கல்லூரியில் படிக்கும் போது ஒருவரை காதலித்தேன்.அவர் காதலர் தினம் அன்று என்னிடம் வந்து முன்னாள் காதலியுடன் டேட்டிங் செல்ல போவதாக கூறினார். அந்த சமயத்தில் நான் நொறுங்கிவிட்டேன்.