துப்பாக்கி முனையில் காரை மறித்து சூறையாடிய பைக் கொள்ளையர்கள் - வெளியான அதிர்ச்சி வீடியோ!

Viral Video Delhi
By Vinothini Jun 27, 2023 05:56 AM GMT
Report

டெல்லியில் பட்டப்பகலில் காரை வழி மறித்து பைக்கில் வந்த நபர்கள் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சிகள்

டெல்லி, பிரகதி மைதான் சுரங்க சாலை பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தவர்களை வழி மறித்து பைக்கில் வந்தவர்கள் கொள்ளை அடித்துள்ளனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

துப்பாக்கி முனையில் காரை மறித்து சூறையாடிய பைக் கொள்ளையர்கள் - வெளியான அதிர்ச்சி வீடியோ! | Gun Point Robbery Happened In Delhi

அதில், நேற்று காரில் 2 நபர்கள் டெல்லி பிரகதி மைதான் சுரங்க சாலையில் குருகிராமை நோக்கி ரூ. 2 லட்சம் பணத்துடன் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர், காரை ஓரம் கட்டி மறித்தனர்.

பைக் கொள்ளையர்கள்

இந்நிலையில், அந்த பைக்கில் இருந்த 4 பேரும் ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டனர் அவர்களில் ஒருவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறார். இதையடுத்து காரில் இருந்தவர்கள் பணப்பையை அவர்களிடம் ஒப்படைக்க, வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேரும் அங்கிருந்து செல்கின்றனர்.

இதனை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விசாரணையில் ஆண்ட காரில் வந்த நபர்கள் டெலிவரி ஏஜென்ட்டுகள் என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.