காதல் திருமணம் செய்த குஜராத் பெண் - அடுத்தடுத்து வெளியான பகீர் வீடியோ
கணவரின் குடும்பம் பணம் கேட்டு மிரட்டுவதாக குஜராத் இளம்பெண் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
தென்காசி, இலஞ்சி கொட்டாகுளம் பகுதியில் வினீத் -கிருத்திகா காதல் திருமணம் செய்து கொண்டனர். கிருத்திகாவை அவரது பெற்றோர் கடத்திச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வைரல் ஆனதை தொடர்ந்து, இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து கிருத்திகாவை தேடி வந்தனர்.
இதற்கிடையில், குஜராத் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து கிருத்திகாவுக்கும், அவரது உறவினரான மேத்ரிக் பட்டேல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது போன்ற வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கிருத்திகா பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.
கடத்திய பெற்றோர்?
அதில், தன் விருப்பப்படியே தனது பெற்றோர் உடன் இருப்பதாக கிருத்திகா தெரிவித்த சூழலில், 2 நாட்களுக்கு முன்னர் கிருத்திகாவும், வினித்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது. இப்படி நாளுக்கு நாள் இச்சம்பவம் பல திருப்பு முனைகளை கண்டது.
இந்நிலையில், கிருத்திகா ஒரு வீடியோவை பதிவிட்டு அவரது வழக்கறிஞர்கள் மூலமாக வெளியிட்டுள்ளார். அதில், வினீத்தின் குடும்பத்தார் என்னை வைத்து எனது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல் விட்டதாகவும், இதை தெரிந்து கொண்ட தான் தனது கணவரான மேத்ரிக் பட்டேல் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்து தன்னை அழைத்துச் செல்லும்படி கோரிக்கை வைத்ததாகவும்,
அதனால்தான் தனது பெற்றோர் தன்னை அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் கிருத்திகா தனது குடும்பத்தினரோடு மதுரை வந்தார். அதில், கிருத்திகாவை 20 நாட்கள் காப்பகத்தில் வைத்து விசாரிக்கவும், அவரது பெற்றோர்களை அவர் பார்க்க அனுமதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.