திடீரென இடிந்து விழுந்த பள்ளிக்கூட சுவர் - பதற வைக்கும் வீடியோ; மாணவர்களின் நிலை என்ன?
பள்ளிக்கூட சுவர் இடிந்து விழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத்
குஜராத் மாநில வடோதரா நகரில் ஸ்ரீ நாராயண் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. நேற்று (19.07.2024) மதியம் 12:30 மணியளவில் பள்ளிக்கூடத்தின் முதல் தளத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் இருந்த சமயம் வகுப்பறையின் சுவர் வெளிப்பக்கமாக இடிந்து விழுந்துள்ளது.
இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அங்கு சைக்கிளை நிறுத்த சென்ற ஒரு 7 ம் வகுப்பு மாணவனுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பள்ளி முதல்வர்
மேலும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 சைக்கிள்கள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக பேசிய பள்ளி முதல்வர் ரூபல் ஷா, மதியம் 12;30 மணியளவில் பலத்த சத்தம் கேட்டதையடுத்து உடனடியாக அந்த இடத்திற்கு சென்றோம். அதில் ஒரு மாணவருக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டிருந்தது. இந்த சம்பவம் எதிர்பாராத விதமாக நிகழ்ந்துள்ளது. என பேசியுள்ளார்.
School's roof collapses in Vadodara, Gujarat.
— Navneet (@NavneetSiingh__) July 20, 2024
After Bridges and airport canopies, it's time for schools now. pic.twitter.com/oy5no7J37s
இந்த பள்ளிக்கூட கட்டடம் கட்டப்பட்டு 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஆனால் எந்த பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளபடாததே இந்த சம்பவத்திற்கு காரணம் என மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகம் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.