உலகிலேயே முதல் முறை - அசைவ உணவுகளுக்கு தடை விதித்த குஜராத் நகரம்!!
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தின் பாலிதானா என்ற நகரில் அசைவ உணவு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஒரு அறிவிப்பை பிறப்பிக்கும் உலகின் முதல் நகரம் என்ற வரலாற்றையும் இந்நகரம் படைத்துள்ளது.
அங்கு தற்போது அசைவ உணவுகளை உண்பது இப்போது சட்டவிரோதம் கருதப்படுகிறது. அதே போல, இறைச்சிக்காக விலங்குகளை படுகொலை செய்தலும் சட்டவிரோதமானது அறிவிக்கப்பட்டு, அதனை மீறுபவர்களுக்கு சட்டரீதியான விளைவுகளுக்கு உட்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடை பிறப்பிக்கப்பட்டுள்ள இந்நகரத்தில் சுமார் 250 கசாப்புக் கடைகளை மூட வேண்டும் என்று வாதிட்ட 200 ஜெயின் துறவிகள் தலைமையில் நடந்த போராட்டங்களுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டங்கள் ஜெயின் சமூகத்தால் நிலைநிறுத்தப்பட்ட மத மற்றும் நெறிமுறைக் கொள்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
இந்திய குடியுரிமையே வேண்டாம் - குஜராத்தை காலி செய்து கிளம்பிய 20 ஆயிரம் மக்கள்!! இதில் தமிழகத்தின் இடம்?
மனிதர்கள், பூச்சிகள், பறவைகள் அல்லது விலங்குகள் என எந்த ஒரு உயிரையும் காயப்படுத்தக்கூடாது, கொல்லப்படக்கூடாது, சாப்பிடக்கூடாது என்று ஜெயின் மத பின்பற்றுபவர்கள் நம்பிக்கை.
பாலிதானா நகரம் இது ஜெயின்களின் புனித யாத்திரை தலங்களில் ஒன்றாக "ஜெயின் கோயில் நகரம்" என்ற புனை பெயரை கொண்டுள்ளது.
சத்ருஞ்சய மலைகளுக்கு இடையில் அமைந்துள்ள இந்நகரம் 800'க்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றில் ஆதிநாத் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.