உலகில் அசைவ உணவை தடை செய்த முதல் நகரம் - இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா?
உலகில் முதல்முறையாக அசைவம் தடை செய்யப்பட்ட நகரமாக இந்தியாவில் ஒரு நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிதானா
இந்தியாவில் அனைத்து நகரங்களிலும் அனைத்து மத மக்களும் பரவி வசித்து வருவதால் பொதுவாக சைவ, அசைவ உணவுகள் அணைத்து நகரங்களிலும் உள்ளது. ஆனால் குஜராத் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா என்ற நகரம் முற்றிலும் அசைவ உணவுகளை தடை செய்துள்ளது.
இங்கு 800 க்கு மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்நகரில் ஜெயின் சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அசைவ உணவுகள் மற்றும் பூமிக்கு கீழே விளைந்த கிழங்கு வகைகளை ஜெயின் சமூக மக்கள் தங்கள் உணவுகளில் எடுத்துக் கொள்வதில்லை.
ஜெயின்
அங்கு உள்ள 200 க்கு மேற்பட்ட இறைச்சி கூடங்களை மூட சொல்லி ஜெயின் துறவிகள் போராட்டம் நடத்தினர். இவர்களின் உணர்வுகளை மதிக்கும் விதமாக அரசாங்கம் இங்கு இறைச்சியை தடை செய்துள்ளது. இங்கு முட்டை கூட தடை செய்யப்பட்டுள்ளது.
பாலிதனாவின் இந்த முடிவு ஜெயின் சமூகத்தின் செல்வாக்கை காட்டுகிறது. குஜராத்தின் மக்கள் தொகையில் ஜெயின் சமூக மக்கள் 1 சதவீதம் தான் உள்ளனர். இது போன்று குஜராத்தின் மற்ற சில நகரங்களிலும் அசைவ உணவை தடை செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.