மருத்துவர் சொன்ன வார்த்தை..தர்ம அடி கொடுத்த உறவினர்கள்- மிரண்ட காவல்துறை!

Gujarat Crime Doctors
By Vidhya Senthil Sep 20, 2024 06:01 AM GMT
Vidhya Senthil

Vidhya Senthil

in இந்தியா
Report

செருப்பைக் கழற்றச் சொன்ன மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்

குஜராத் மாநிலம்,பவ்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், தலையில் ஏற்பட்ட காயத்திற்குச் சிகிச்சை பெறுவதற்காக அவசர சிகிச்சைப் பிரிவில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அந்த பெண்ணை காண்பதற்கு அவரது உறவினர்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர் .

gujarat

அப்போது நோயாளிகள் அறைக்குள் இருந்த மருத்துவர் ஜெய்தீப் சின்ஹ கோகில், அவர்களிடம் செருப்பை வெளியே கழற்றிவிட்டு உள்ளே வருமாறு கூறியதாகத் தெரிவிக்கிறது. இதனால் உறவினர்களுக்கும் மருத்துவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் பேச்சுவார்த்தை முற்றவே ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவரைக் கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த செவிலியர்கள், சிகிச்சை பெற்று வந்த பெண் என அனைவரும் சேர்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

நூடுல்ஸ்தான் வேண்டும்; சிறையில் அடாவடி செய்த சஞ்சய் ராய் - நாட்டை உலுக்கிய கொடூரம்!

நூடுல்ஸ்தான் வேண்டும்; சிறையில் அடாவடி செய்த சஞ்சய் ராய் - நாட்டை உலுக்கிய கொடூரம்!

மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, மருத்துவரைத் தாக்கிய ஹிரேன் தங்கர், பவ்தீப் தங்கர் மற்றும் கவுசிக் குவடியா ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு கைது செய்தனர் .

தாக்குதல்

மேலும் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

viral video

முன்னதாக கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் கடந்த 8ஆம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதற்காக நீதிகேட்டு போராடிவரும் நிலையில் மீண்டும் மருத்துவர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.