குஜராத்: 2 கட்டங்களாக வாக்குப்பதிவு - தேர்தல் தேதி அறிவிப்பு!

Gujarat Himachal Pradesh
By Sumathi Nov 03, 2022 08:16 AM GMT
Report

குஜராத் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு 2 கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் தேர்தல்

குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

குஜராத்: 2 கட்டங்களாக வாக்குப்பதிவு - தேர்தல் தேதி அறிவிப்பு! | Gujarat Assembly Election Date Announced

ஆனால் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது, குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி இரு கட்டங்களாக நடைபெறும்.

வாக்குப்பதிவு

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறும். பதவிக்காலம் 2023ம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மொத்தம் 182 தொகுதிகளில் 4.90கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 51.782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில், 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 80 வயதானவர்கள், 40% திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார்.