விபத்தை வேடிக்கை பார்க்க நின்ற மக்கள் - சொகுசு கார் பயங்கரமாக மோதி 9 பேர் பலி!

Gujarat Accident Death
By Sumathi Jul 21, 2023 04:47 AM GMT
Report

கார் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகினர்.

கார் விபத்து 

குஜராத், அகமதாபாத் - காந்தி நகர் தேசிய நெடுஞ்சாலையில் மஹிந்திரா தார் ஜீப் ஒன்று இஸ்கான் மேம்பாலத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

விபத்தை வேடிக்கை பார்க்க நின்ற மக்கள் - சொகுசு கார் பயங்கரமாக மோதி 9 பேர் பலி! | Gujarat 9 Dead Speeding Luxury Car In Accident

அப்போது அங்கு கூட்டம் குவிந்தது. இந்நிலையில், 160 கி.மீ வேகத்தில் வந்த ஜாகுவார் கார் கூட்டத்தினர் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காவலர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.

9 பேர் பலி

இந்த விபத்தில் பலர் சம்பவ இடத்திலிருந்து 20 முதல் 25 அடி தூரம் வரை தூக்கி வீசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறிந்து வந்த போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விபத்தை வேடிக்கை பார்க்க நின்ற மக்கள் - சொகுசு கார் பயங்கரமாக மோதி 9 பேர் பலி! | Gujarat 9 Dead Speeding Luxury Car In Accident

தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து அரங்கேறிய விபத்து சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.