மருத்துவர்களின் வேலை நிறுத்ததால் நோயாளி உயிரிழப்பா? மருத்துவமனை விளக்கம்
மருத்துவர்களின் வேலை நிறுத்ததால் நோயாளி உயிரிழந்து விட்டதாக நோயாளியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மருத்துவருக்கு கத்திக்குத்து
சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தற்காலிக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நோயாளி உயிரிழப்பு
இந்நிலையில் அதே மருத்துவமனையில் சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் வயிற்றுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். மருத்துவர்கள் வேலை நிறுத்தம் காரணமாக முறையான சிகிச்சை அளிக்காததால்தான் உயிரிழந்து விட்டார் என விக்னேஷின் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விளக்கமளித்த மருத்துவமனை நிர்வாகம், "தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விக்னேஷ், நோய் தீவிரத்துடன் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவரை அழைத்து வந்தபோது உள்நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் இருந்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை தரப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்" என தெரிவித்துள்ளனர்.
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan