நடிகர் விஜய் மடியில் இருக்கும் சிறுவன் பிரபல நடிகர் - யார் தெரியுமா?
விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய்.சமீபத்தில் வெளியான கோட் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது எச். வினோத்தின் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார்.இது விஜய்யின் கடைசி படமாகும்.

கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் விஜய்யின் தவெக கட்சி மாநாடு விக்கிரவாண்டியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தவெக கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகிக்கும் விஜய், தளபதி 69 படத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார்.
வைரல் போட்டோ
இந்த நிலையில் , திரைப் பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் அடிக்கடி இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்தை ஏற்படுத்து உண்டு. அந்த வகையில், நடிகர் விஜய் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது . அந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் தனது தாய் ஷோபா அருகில் சிறுவன் ஒருவரை மடியில் வைத்தவாறு அமர்ந்துள்ளார்.

விஜய் மடியில் அமர்ந்திருக்கும் இந்த சிறுவன் இன்று பிரபல நடிகராக உள்ளார். யார் அவர் தெரியுமா ? வேறு யாரும் இல்லை விஜய்யின் சித்தி மகன் தான் நடிகர் விக்ராந்த் தான் . இவர் கற்க கசடற, முத்துக்கு முத்தாக, கவண், கெத்து, மற்றும் பக்ரீத் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் IBC Tamil