பிரம்மாண்டமாக நடந்த பிக் பாஸ் விக்ரமன் திருமணம் - பெண் யார் தெரியுமா?
பிக்பாஸ் சீசன் 6 ல் போட்டியாளராகக் கலந்து கொண்ட விக்ரமன் திருமணம் சென்னையில் (நவ.04) நடைபெற்றது.
விக்ரமன்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக விக்ரமன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தொடக்கத்தில் அமைதியாக இருந்து வந்த விக்ரமனை சக போட்டியாளரான அசீம் தொடர்ந்து சீண்டி வந்தார். ஒருகட்டத்திற்கு மேல் விக்ரமனும் பதிலடி கொடுக்க அவருக்கு ரசிகர்கள் ஆதரவு தர துவங்கினர்.
இதனால் பிக் பாஸ் டைட்டிலை விக்ரம் தான் வெல்வார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்அசீம் தான் டைட்டிலை தட்டி சென்றார். இதனையடுத்து விக்ரமன் இரண்டாம் இடத்தை பிடித்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு விக்ரமானுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ச்சைகளில் சிக்கினார்.
விக்ரமன் மீது பெண் ஒருவர் பண மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்து இருந்தார்.ஆனால் இதற்கு விக்ரமன் மறுப்பு தெரிவித்து இருந்தார். இந்த சுழலில் தமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக உள்ள ப்ரீத்தி கரிகாலன் என்பவருடன் நேற்று சென்னையில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
திருமணம்
ப்ரீத்தி, இயக்குநர் பார்த்திபனிடம் உதவி உள்ளார். மேலும் கோடிட்ட இடங்களை நிரப்புக ,கதை திரைக்கதை வசனம் இயக்கம்,ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார்.இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். மேலும் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடந்துள்ளது .
தன்னுடைய திருமண புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமன் பகிர்ந்து இருக்கிறார். அதில் "அன்பும் அறனும்" என்று போஸ்ட் போட்டு இருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.தற்பொழுது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.