Wednesday, Jul 9, 2025

620 ஏக்கர்.. ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கிய GST ஆணையர் - எழுந்த சர்ச்சை!

India Maharashtra
By Jiyath a year ago
Report

ஒரு கிராமத்தையே அரசு அதிகாரி ஒருவர் விலைக்கு வாங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

ஜி.எஸ்.டி ஆணையர்

மகாராஷ்டிரா மாநிலம் நந்துார்பர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் வால்வி. இவர் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜி.எஸ்.டி. தலைமை ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.

620 ஏக்கர்.. ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கிய GST ஆணையர் - எழுந்த சர்ச்சை! | Gst Commissioner Grabs 620 Acres

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தின் கண்டடி பள்ளத்தாக்கில் உள்ள ஜடானி என்ற கிராமத்தையே தனது குடும்பத்தினருடன் சேர்ந்து சந்திரகாந்த் வால்வி விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரெட்டை கதிரே.. ஒரே பள்ளியில் சேர்ந்த 8 ஜோடி இரட்டையர்கள் - அதுவும் இந்தியாவில்!

ரெட்டை கதிரே.. ஒரே பள்ளியில் சேர்ந்த 8 ஜோடி இரட்டையர்கள் - அதுவும் இந்தியாவில்!

பெரும் சர்ச்சை

அக்கிராமத்தின் நிலப்பகுதிகளை அரசு கையகப்படுத்தப் போவதாகக் கூறி, மக்களை ஏமாற்றி அவர் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஜடானி கிராமம் மொத்தம் 620 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

620 ஏக்கர்.. ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கிய GST ஆணையர் - எழுந்த சர்ச்சை! | Gst Commissioner Grabs 620 Acres

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஒரு கிராமத்தையே அரசு அதிகாரி விலைக்கு வாங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.