சென்னையில் சரிந்த வாக்கு பதிவு ; இது தான் முக்கிய காரணம்? மாநகராட்சி ஆணையர் பேட்டி!

Chennai Lok Sabha Election 2024
By Swetha Apr 20, 2024 06:40 AM GMT
Report

நகர்ப்புற மக்கள் மீது சென்னை மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சரிந்த வாக்கு பதிவு 

இந்த ஆண்டின் மக்களவை தேர்தல் நேற்று நடைபெற்று நிறைவடைந்த நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் சற்று குறைவான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை மாவட்டத்தில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைக்கும் பணி நடைபெற்றது.

சென்னையில் சரிந்த வாக்கு பதிவு ; இது தான் முக்கிய காரணம்? மாநகராட்சி ஆணையர் பேட்டி! | City People Did Not Vote Says Radhakrishnan

அதனை சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஸ்ட்ராங் ரூமில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரித்து கொண்டு இருந்தார்.

மக்களவை தேர்தல் - சென்னை வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு!

மக்களவை தேர்தல் - சென்னை வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு!

மாநகராட்சி ஆணையர்

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 156 கேமராக்கள் கொண்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட உள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமிற்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

சென்னையில் சரிந்த வாக்கு பதிவு ; இது தான் முக்கிய காரணம்? மாநகராட்சி ஆணையர் பேட்டி! | City People Did Not Vote Says Radhakrishnan

தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எந்த விதமான முறைகேடுகளும் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சென்னையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது, ”தேர்தல் ஆணையம் சார்பில் போதிய விழிப்புணர்வு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். ஆனால் நகர்ப்புறத்தில் உள்ள மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக வாக்குப்பதிவு சதவீதம் மந்தமாக இருந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.