விண்வெளியில் உயரமாகலாம்; முடி நீளமாக வளரும் - சுனிதா சொன்ன சீக்ரெட்!
விண்வெளியில் இருக்கும்போது ஏற்படும் மாற்றம் குறித்து சுனிதா தகவல் பகிர்ந்துள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்களை சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்குத் திரும்புவார் என நாசா அறிவித்துள்ளது. அவர் சென்ற விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர் பூமிக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விண்வெளி மாற்றம்
இந்நிலையில், அவர் முன்னதாக அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியதும், மனித உடல் பழைய நிலையை அடைய எத்தனை நாள்கள் ஆகும் என்று மாணவி ஒருவரின் கேள்விக்கு, சுனிதா கூறியிருப்பதாவது, உங்கள் கால் அடிப்பாகமே மறைந்துபோய்விடும்.
ஏனென்றால் நீங்கள் அங்கு நடக்கவே மாட்டீர்கள், விரல் நகங்களும், தலைமுடியும் வேகமாக வளரும். புவிஈர்ப்பு விசை இல்லாததால், முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் கூட போய்விடும், அதற்கு சில காரணங்கள் உள்ளன, அதில் ஒன்று உடலில் திரவ இடமாற்றம் நேரிடும், அழுத்தம் இல்லாததால், அங்கு முதுகெலும்பு விரிவடைந்துவிடும்.
அதனால், பூமியில் இருப்பதைவிடவும், ஒருவர் விண்வெளியில் சற்று உயரமாக காணப்படுவார்.
பூமிக்குத் திரும்பியதும், பழையை நிலைமை மெல்ல வந்துவிடும். புவிஈர்ச்சி விசையிலிருந்து தப்பிக்க முடியாது. மீண்டும் பழைய உயரமே வந்துவிடும் எனத் தெரிவித்துள்ளார்.