மணமகன் தேவை; ரூ.1 கோடி வருமானம் இருக்கனும்..பெண்ணின் ஆசை- நெட்டிசன்கள் ஷாக்!
மணமகனின் ஆண்டு வருமானம் ஒரு கோடி ரூபாய் இருக்க வேண்டும் என்று பெண் ஒருவர் தெரிவித்த மெசேஜ் வைரலாகி இருக்கிறது.
மணமகன் தேவை
இந்த கால கட்டத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வரன் அமைவதில் சற்று சிரமமாக இருக்கிறது. அதுவும் படிப்பு, வேலை, வருமானம், சாதி, ஜாதகம் எனப் பார்த்து திருமணம் செய்வதற்குள் பாதி வாழ்கை கடந்து விடுகிறது. இச்சுழலில் தான் பலரும் இணையத்தளம் வழியே வரன்னை தேடி கொள்கின்றனர்.
அந்த வகையில், பெண் ஒருவர் தன் கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று வாட்ஸ்ஆப்பில் அனுப்பிய மெசேஜ் ஒன்று வைரலாகி இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் அம்பர் என்பவர் ஒரு உரையாடலை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,37 வயது பெண் ஒருவர், தன் வருங்கால கணவர் குறித்து கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதில்,எனது குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வருமானம் வருகிறது. ஆனால், நான் எதிர்பார்க்கும் மாப்பிள்ளைக்கு மும்பையில் சொந்தமாக வீடு இருக்கவேண்டும். திருமணமானவராக இருக்கக்கூடாது.
நெட்டிசன்கள் ஷாக்
அழகாகவும், நன்கு படித்தவராகவும், குறிப்பாக, எம்.பி.பி.எஸ். அல்லது சி.ஏ படித்தவராகவோ, பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாகவோ இருக்கவேண்டும். அதோடு, அவருக்கு ஆண்டு வருமானம் குறைந்தது ரூ.1 கோடி இருக்கவேண்டும்.இத்தாலி அல்லது ஐரோப்பாவில் வாழ விரும்பக்கூடியவராக இருக்கவேண்டும்’என்று பட்டியலிட்டுள்ளார்.
தற்போது இந்த உரையாடல் இணையத்தில் பரவி படு வைரலாகி வருகிறது. இது குறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து அவர்களது கருத்துக்களை விவாதித்து வருகின்றனர். அவற்றில், ’இவ்வாறு கேட்பதில் தவறில்லை, ஒவ்வொருவரும் தங்களது விருப்பப்படி தேர்வு செய்ய உரிமை இருக்கிறது’ என்று சிலரும், ‘மாப்பிள்ளையைத் தேர்வு செய்ய அவருக்கு உரிமை இருக்கிறது, அதேசமயம் அவரை நிராகரிக்க ஆண்களுக்கும் உரிமை இருக்கிறது' என்றும் குறிப்பிட்டுள்ளனர். ’
இந்தியாவில் 1.7 லட்சம் பேர் மட்டுமே ஒரு கோடிக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் பெறுகின்றனர். அப்படி இருக்கும்போது, 37 வயதில் இப்பெண் தனது கனவு நாயகனை பெறுவது 0.01%தான் சாத்தியம்’ என்றும் ஒரு சில நெட்டிசன் தெரிவித்துள்ளனர்.