முதலிரவு பாலில் இருந்த ட்விஸ்ட் - பல்பு வாங்கிய மாப்பிள்ளை - தெறித்த மனைவி
வரதட்சணையாக வாங்கிய பணம் மற்றும் நகைகளை மனைவி முதலிரவு அன்றே சுருட்டிக்கொண்டு ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருமண வரதட்சணை
சில முறைகளில் மணமகனே வரதட்சணை கொடுத்து பெண்களை திருமணம் செய்யும் வழக்கமும் நம் ஊர்களில் நிலவி வருகின்றது.
வரதட்சணை என்பதே தவறான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்தில்லாத போதிலும், இந்த கொடுக்கல் வாங்கல் நடந்து கொண்டே தான் இருக்கின்றது.
அப்படி தான் ராஜஸ்தான் பரத்பூரைச் சேர்ந்த மாப்பிள்ளை, உத்தரபிரதேசம் சுல்தான்பூரைச் சேர்ந்த பெண்ணை வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துள்ளார்.
பெண்ணிற்கு ரூ.1 லட்சம் ரொக்கமாக பணம், மணப்பெண்ணிற்கு ஆடை, தங்க நகைகள் என 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களையும் வரதட்சணையாக ஆசையோடு மாப்பிள்ளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
பாலில் ட்விஸ்ட்..
திருமணம் முடிந்த இரவு, முதலிரவுக்காக காத்திருந்த அவருக்கு, மனைவி கொண்டு தான் பால் தான் அவருக்கான ட்விஸ்ட் என தெரியாமல் போயுள்ளது.
மொத்த வரதட்சணையும் வாங்கி கொண்ட பெண், முதலிரவில் கொண்டு வந்த பாலில், மயக்க மருந்தை கலந்து கொண்டு வந்து தர, வாங்கிய அருந்திய மாப்பிள்ளை மயக்கமடைந்துள்ளார்.
பின் தனக்கு வந்த வரதட்சணையை அலேக்காக சுருட்டிக்கொண்டு எஸ்கேப்பாகி இருக்கின்றார் மனைவி.
மயக்கம் தெளிந்த பின் விவரம் புரிந்த அப்பாவி மாப்பிள்ளை, போலீசில் தகவல் அளிக்க, தற்போது தப்பிய மணப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.