திருமணத்தன்று மாப்பிள்ளை ஓட்டம் - மணப்பெண்ணுக்கு உடனே நடந்த சம்பவம்!
திடீரென மாப்பிள்ளை மாயமானதால் பெண்ணிற்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்துள்ளது.
திருமணம்
சிதம்பரம் அருகே வரகூர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தி என்பவர் மகளுக்கும், கடலூர் அருகே உச்சிமேடு பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மாலா தம்பதியின் மகன் ஜெயகுமாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
ஜெயக்குமார் நீதிமன்றத்தில் பணியாற்றி வருகிறார். தொடர்ந்து திருமன ஏற்பாடுகள் முழுவதும் நடந்து உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் மண்டபத்தில் குவிந்தனர். இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சியில் மணப்பெண்ணுடன் ஃபோட்டோ ஷூட் முடித்து தூங்க சென்ற ஜெயக்குமார் திருமணத்தன்று மாயமானார்.
மாப்பிள்ளை ஓட்டம்
இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் போலீஸில் புகாரளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், திருமணம் நின்ற நிலையில் மணப் பெண்ணுக்கு வேறொரு மாப்பிளையுடன் உடனடியாக பெண்ணின் பெற்றோர் திருமணத்தை நடத்தி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.