தாலி கட்டும் தருணத்தில் விஷம் குடித்த காதல் ஜோடி - அதிர்ச்சி பின்னணி!
திருமணத்தன்று மணமக்கள் இருவரும் விஷம் அருந்திய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் ஜோடி
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞருக்கும் 20 வயதான இளம்பெண்ணுக்கும் நீண்ட காலமாக காதல் இருந்து வந்துள்ளது.

இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்துள்ளது. பின்னர், அந்த இளைஞரிடம் காதலி தன்னை சீக்கிரம் திருமணம் செய்து கொள் என வற்புறுத்தி வந்துள்ளார்.
ஆனால் அந்த இளைஞனுக்கு இதில் விருப்பமில்லை, அவர் செட்டில் ஆகவேண்டும் என்பதற்காக மேலும் 2 வருடம் கால அவகாசம் வேண்டும் என்ன கேட்டுள்ளார்.
இதனால் அவர் ஏமாற்றி விடுவாரோ என்ற எண்ணத்தில் இந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து, அந்த பெண் உடனே திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தியதால் இரு வீட்டாரும் திருமண ஏற்பாடு செய்தனர்.
தற்கொலை
இந்நிலையில், அவர்கள் கனாடியா என்ற பகுதியில் உள்ள ஆர்ய சமாஜம் கோயிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யதுள்ளனர்.

கடந்த செவ்வாய் கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணமகன் திடீரென விஷம் அருந்தியுள்ளார்.
அதனை அவரது வீட்டாரிடம் கூறியதும் அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர், ஆனால் மணமகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை கேட்ட மணப்பெண்ணும் விஷம் குடித்துள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.