முதலிரவுக்கு சென்ற புது மாப்பிள்ளை.. விடிந்ததும் கதறி அழுத மணப்பெண் - அதிர்ச்சி சம்பவம்!
புதுமண தம்பதிகள் முதலிரவுக்கு சென்றதும் நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
ராணிப்பேட்டை மாவட்டம், ஓச்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் 28 வயதான இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் செல்போன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து வந்தார், இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரின் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, காவேரிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் சரவணனுக்கும், ஸ்வேதாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்ததும், திம்மாவரத்தில் உள்ள மனப்பெண்ணின் வீட்டிற்கு சென்றனர். அங்கு இவர்களுக்கு முதலிரவு ஏற்பாடு நடந்தது.
அதிர்ச்சி
இந்நிலையில், இருவரும் முதலிரவு அறைக்குள் சென்றனர், விடிந்ததும் தூங்கிக்கொண்டிருந்த ஸ்வேதா எழுந்து பார்த்தபோது, சரவணன் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சியில் கத்தி அலறினார் ஸ்வேதா, இதனால் அனைவரும் ஓடிவந்து பார்த்தனர் போலீசுக்கு தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து அவரது சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், முதலிரவு அறைக்குள் செல்லும் முன்பு சரவணன், தன்னுடைய பெற்றோரிடம் எப்போதும் போலவே பேசியிருக்கிறார்.. எந்தவித பதட்டமும், வருத்தமும், முகத்தில் தெரியவில்லை என்கிறார்கள். ஆனால், விடிகாலையில் எழுந்து பார்த்தபோதே, சடலம் தூக்கில் தொங்கியதாக ஸ்வேதா கூறியுள்ளதால் இது மர்மமாக உள்ளது. மேலும், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.