2 சிறுமிகளுக்கு 68 வயது தாத்தா கொடுத்த பாலியல் தொல்லை - அதிரடியாக கைது செய்த போலீசார்
வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, 68 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக போலீசார் கைது செய்துள்ளனர்.
பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் தனது வீட்டின் அருகே பிரியாணி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது 6 வயது மகளும், அதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியும், வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது, வண்ணாரப்பேட்டை லாலா குண்டா தெருவைச் சேர்ந்த 68 வயதுடைய சர்தார் செரிப் என்பவர், இரண்டு சிறுமிகளையும் தனியே அழைத்துள்ளார். தாத்தா கூப்பிட்டதும் அந்தச் சிறுமிகள் சென்றுள்ளனர்.
அப்போது, அந்த முதியவர் அச்சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமிகள் பெற்றோர்களிடம் சென்று முதியவர் செய்ததை கூறியுள்ளனர்.
இது குறித்து பெற்றோர்கள் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சர்தார் செரிப் மீது புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிறகு, சர்தார் செரிப் பாலியல் தொல்லை கொடுத்ததை உறுதி செய்து, அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.