விடிஞ்சா கல்யாணம் புதுமாப்பிள்ளை திடீர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்!
காலையில் காதலித்த பெண்ணுடன் திருமணம் ஆக உள்ள நிலையில் மணமகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம்
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள ஆலம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி சரசு, இவர்களின் மகன் கேசவமூர்த்தி, இவருக்கு 28 வயது ஆகிறது.
இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
அதே பள்ளியில் அலுவலக ஊழியராக வேலை பார்க்கும் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணும், கேசவமூர்த்தியும் காதலித்து வந்தனர். இதனால் இருதரப்பு பெற்றோரும் சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இவருக்கு நாளை காதல் திருமணம் நடக்க உள்ளது.
தற்கொலை
இந்நிலையில், நேற்று மாலை வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு இவர் தற்கொலை செய்து கொண்டார்.
பக்கத்து வீட்டு சிறுவன் வீட்டுக்குள் சென்றபோது அவர் தூக்கில் தொங்குவதை பார்த்து பயத்தில் அலறினான். சத்தம் கேட்டு வீட்டுக்குள் ஓடிய சரசும், அவருடைய உறவினர்களும் அதை பார்த்து அலறி துடித்தனர்.
இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விசாரணை நடத்தியதில் , கடந்த ஒரு வாரமாக மணமக்கள் அடிக்கடி செல்போனில் தங்களுடைய வருங்காலம் எப்படி இருக்கவேண்டும் என்று பேசி வந்துள்ளனர்.
அப்போது மணப்பெண் இவரிடம் திருமணத்துக்கு பின்னர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சில நிபந்தனைகளை விதித்துள்ளார். அதைக்கேட்டு இவர் திருமணத்துக்கு முன்பே இப்படி கட்டளையிடுகிறாரே என்று கவலை பட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாகத்தான் இவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.