முறை தவறிய திருமணம்; 3 நாட்களில் லாட்ஜில் மனைவி முன் 23 வயது இளைஞர் தற்கொலை!

Kanyakumari
By Sumathi May 20, 2023 07:42 AM GMT
Report

திருமணமான 3 நாளில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்

நாகர்கோவில், ஆசாரிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் விஜய்(23). இஸ்திரி தொழிலாளியாக இருந்தார். இவரது கடைக்கு அயர்ன் செய்யக் கொடுக்க ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளம்பெண் ஒருவர் அடிக்கடி வருவது வழக்கம்.

முறை தவறிய திருமணம்; 3 நாட்களில் லாட்ஜில் மனைவி முன் 23 வயது இளைஞர் தற்கொலை! | Kanniyakumari Man Suicide Lodge Room For Love

கணவரைப் பிரிந்து வாழும் பெண்ணுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், விஜய்க்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இதனை விஜய் வீட்டில் தெரிவித்தபோது அந்தப் பெண் 7 வயது அதிகம் என்பதால் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இளைஞர் தற்கொலை

இதனால், கோவிலில் வைத்து விஜய்யும், அந்த இளம்பெண்ணும் திருமணம் செய்துள்ளனர். மேலும், விடுதியில் அறை எடுத்து மூன்று நாள்களாக சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில், தன் குடும்பத்தினரிடம் திருமணத்திற்கு சம்மதம் வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டதில் வீட்டில் சம்மதிக்கவில்லை.

இதனால் மனமுடைந்த விஜய் வெளியே சென்று விஷம் குடித்துவிட்டு விடுதிக்கு வந்து ‘நான் உன்னை விட்டுப் பிரிகிறேன். அடுத்த ஜென்மத்திலாவது நாம் சேர்ந்து வாழ வேண்டும்”எனச் சொல்லிவிட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கினார்.

உடனே அவரை அருகில் மருத்துவமனையில் அனுமதித்ததில் மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதனையடுத்து போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.