குதிரையில் ஊர்வலம் வந்த மணமகன் - நடந்த செயலால் குடும்பத்தினர் அதிர்ச்சி!

Marriage Madhya Pradesh Death
By Sumathi Feb 17, 2025 06:08 AM GMT
Report

குதிரை மீது அமர்ந்திருந்த மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஊர்வலம்

மத்தியப் பிரதேசம், யோபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரதீப் ஜாட்(26). இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமண ஊர்வலம் நடைபெற்றது.

பிரதீப் ஜாட்

இதில் மணமகன் அலங்காரத்துடன் குதிரை மீது ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது திடீரென குதிரை மீது அமர்ந்திருந்தவாறே பிரதீப் ஜாட் மயங்கி விழுந்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நடனமாடும் போதே ஏன் பலர் இறக்கின்றனர் தெரியுமா? விவரம் இதோ!

நடனமாடும் போதே ஏன் பலர் இறக்கின்றனர் தெரியுமா? விவரம் இதோ!

மாப்பிள்ளை உயிரிழப்பு

ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவர், மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர், குதிரையில் இருந்து மயங்கி விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருமண நாளில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இந்தூரில் நடைபெற்ற திருமண விழாவில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  https://ibctamilnadu.com/article/mother-killed-son-for-indecent-behaviour-andhra-1739624548