சீர்வரிசையில் பழைய பீரோ - கல்யாணத்தை நிறுத்திய மாப்பிள்ளை!
சீர்வரிசையில் பழைய பொருளை கொடுத்ததாக கூறி மணமகன் திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
வரதட்சணை
ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சகாரியா(25). பஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 22 வயதான ஹீனா பாத்திமா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அண்மையில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டார் யாரும் வராமல் புறக்கணித்துள்ளனர்.

பதறிப்போன பெண் வீட்டார் விசாரித்ததில் அவர்கள் கூறிய விஷயம் அதிர்ச்சியடைய வைத்தது. மணப்பெண் வீட்டார் ஏற்கனவே பயன்படுத்திய பழைய பொருள்களை வரதட்சணையாக தந்தாக அதிருப்தி தெரிவித்து திருமணத்திற்கு வராமல் நிறுத்தியுள்ளனர்.
பழைய பீரோ
இது குறித்து விசாரிக்க சென்ற மணப்பெண்ணின் தந்தையை தகாத முறையில் நடத்தியதாக புகார் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் வரதட்சணை சட்டத்தின் கீழ் புகார் அளித்து வழக்கு பதிவு செய்துள்ளார். சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.