உயிரிழந்த சகோதரின் ஆசையை நிறைவேற்ற... - 600 தட்டுகளில் லாரியில் வந்த சீர்வரிசை... - திருவாரூரில் நெகிழ்ச்சி சம்பவம்
திருவாரூரைச் சேர்ந்தவர் முருகன் (45). வயது 45. இவர் இலை கடையை நடத்தி வந்தார். அதனால், அங்குள்ளவர்கள் இவரை இலைக்கடை முருகன் என்று அழைத்து வந்தனர்.
3 வருடங்களுக்கு முன்பு முருகன் விபத்தில் உயிரிழந்துவிட்டார். அட்சய ரத்னா என்ற 13 வயது மகள் இருக்கிறார். முருகன் தன்னுடைய மகளுடைய மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என்று அடிக்கடி கூறிக்கொண்டே வந்தார்.
விபத்தில் முருகன் உயிரிழந்துவிடவே அந்த ஆசை நிறைவேறாமல் போனது. முருகனுக்கு 6 சகோதரிகள் உள்ளனர். தன்னுடைய சகோதரரின் ஆசையை நிறைவேற்ற அட்சய ரத்னாவின் மஞ்சள் நீராட்டு விழாவை திருவாரூரில் மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டனர்.
இதனையடுதது, திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2,000 பொதுமக்களுக்கு உணவு வழங்கி, சுமார் 600 சீர்வரிசை தட்டுகள் எடுத்து அதனை திறந்த கண்டெய்னர் லாரியில் ஏற்றி செண்டை மேளம் முழங்க, வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று மஞ்சள் நீராட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாடி இருக்கிறார்கள்.
லாரியின் முன்னால், மறைந்த இலைக் கடை முருகனின் படத்தை வைத்து, இந்த சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
இந்த ஊர்வலமாக சென்ற சீர்வரிசையை அங்குள்ள ஊர்மக்கள் ஆச்சரியத்தனர். இது குறித்த வீடியோக்களும், புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.