தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் - காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

Karnataka Marriage Relationship
By Sumathi May 01, 2025 09:00 AM GMT
Report

தாலிக்கட்டும் நேரத்தில் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதல் விவகாரம்

கர்நாடகா, பால்புரா கிராமத்தை சேர்ந்தவர் வேணு. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் - காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க | Groom Calls Off Wedding For Love Affair Karnataka

அந்த நிகழ்ச்சி முடிந்ததும், மணமகனும், மணமகளும் அவரவர் அறைக்கு சென்றுவிட்டனர். தொடர்ந்து காலையில் திருமணத்திற்கு இருவரும் மணமேடையில் அமர்ந்திருந்தனர். இதற்காக மண்டபத்தில் உறவினர்கள் அனைவரும் குவிந்தனர்.

இந்நிலையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகன் திடீரென்று மணமேடையில் இருந்து எழுந்து, மணப்பெண் ஏற்கனவே வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். திருமணத்துக்கு முன்பே இதை என்னிடம் கூறினார். வேறொருவரை காதலித்த பெண்ணை நான் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்?

திருமணத்தில் போடப்பட்ட பாடலால் முன்னாள் காதலி நியாபகம் - மணமகன் எடுத்த விபரீத முடிவு

திருமணத்தில் போடப்பட்ட பாடலால் முன்னாள் காதலி நியாபகம் - மணமகன் எடுத்த விபரீத முடிவு

மணமகன் செயல்

இது வாழ்க்கைக்கு ஒத்து வராது. திருமணம் செய்து கொண்டாலும் மன நிம்மதியுடன் வாழ முடியாது என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார். உடனே மண்டபத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் குடும்பத்தினர் போலீஸில் புகாரளித்துள்ளனர்.

தாலிக்கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணமகன் - காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க | Groom Calls Off Wedding For Love Affair Karnataka

அதன் அடிப்படையில், போலீஸார் இரு வீட்டாரையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் மணமகன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.