Ex காதலனை சந்திக்க போன மணமகள்.. போட்டுக்கொடுத்த தோழி - அப்புறம் என்ன?
திருமணத்திற்கு முன் மணமகள் காதலனை பார்க்கச் சென்றதால் மணமகன் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
கெஞ்சிய மணப்பெண்
ஆப்பிரிக்க நாடான கானாவில் நின்றுபோன திருமணம் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், மணப்பெண் திருமணம் ஆவதற்கு முன்பு தன்னுடைய முன்னாள் காதலனை சந்தித்து விட்டு வந்து இருப்பதை மணமகன் கண்டறிந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணமகன் எதனையும் விசாரிக்காமல் அதிரடியாக நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த பெண் நடு ரோட்டில் கீழே அழுது புரண்டு கெஞ்சியுள்ளார்.
ஆனால் சிறிதும் கண்டுக்கொள்ளாத மணமகன் அங்கிருந்து கிளம்பியுள்ளார். அதன்பின் தான் முன்னாள் காதலனை மணமகள் சென்று பார்த்த சம்பவத்தை அவரது நெருங்கிய தோழியே மணமகனிடம் கூறியதாக தெரிகிறது.