ஒரே ஒரு மெசேஜ் தான்..கல்யாணம் க்ளோஸ் - மணமகன் எடுத்த அதிர்ச்சி முடிவு!
திருமணத்திற்கு முன்பாக மணமகள் அனுப்பிய மெசேஜால் கல்யாணம் நின்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரு மெசேஜ் தான்
கவுகாத்தி பகுதியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்கும், ஹவுலி நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய சமீபத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர்.

அதில் அந்த இளைஞர் வருங்கால மனைவிக்காக சில பரிசுப் பொருட்களை வாங்கி வைத்திருந்துள்ளார். மேலும் அதில் ஷாம்பூ உள்ளிட்ட சில பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்ததும் அந்த மணப்பெண் திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு குறுஞ்செய்தி ஒன்றை மாப்பிள்ளைக்கு அனுப்பி உள்ளார்.
கல்யாணம் க்ளோஸ்
அதில், 'ஒரு பொறியாளராக இருந்து கொண்டு மலிவான ஷாம்பூவை அனுப்பி வைத்துள்ளீர்களே' என தெரிவித்துள்ளார். இதனால் மாப்பிள்ளை மனமுடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
இதனை கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த மணப்பெண், தனது பெற்றோரிடம் இது பற்றி கூற உடனடியாக அனைவரும் மாப்பிள்ளையை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர். ஆனாலும் அவர் திருமணத்திற்கு சம்மதிக்காத்தால் இது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.