சப்பாத்தி பரிமாறுவதில் தாமதம்..திருமணத்தை நிறுத்திய மணமகன் - கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!
சப்பாத்தியால் மணமகன் ஒருவர் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சப்பாத்தி
உத்தரப்பிரதேசம் சந்தவுலி மாவட்டத்தைச் சேர்ந்த மெக்தாப் என்பவருக்கு , கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.வடமாநிலத்தைப் பொறுத்தவரை மணமகள் வீட்டில் தான் திருமணம் நடைபெறும். விருந்தினர்களாக வரும் மணமகன் வீட்டாருக்கு ராஜ உபசரிப்பு அளிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் மெக்தாப் குடும்பத்தாரைப் பெண் வீட்டார் முறைப்படி வரவேற்றனர். அதன் பிறகு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அப்போது மணமகன் வீட்டாருக்குச் சப்பாத்தி வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மெக்தாப் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அந்த ஒரே ஒரு Reel தான்..வீட்டில் சடலமாக கிடந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி!
மணமகன்
இதனையடுத்து திருமண நிகழ்ச்சியிலிருந்து பாதியில் வெளியேறினர். பின்னர் மணமகன் மெக்தாப் மாயமாகினார்.இதனால் திருமணம் நின்று போனது. திருமணத்திற்காக மெகதாப்பிற்கு கொடுத்த மூன்றரை லட்சம் ரூபாய் உள்படத் திருமணத்துக்காக 7 லட்சம் ரூபாய் வரை மணமகள் வீட்டார் செலவு செய்திருந்தனர்.
இந்த சூழலில் சில நாட்களுக்குப் பிறகு மணமகன் மெக்தாப் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தகவலை அறிந்த பெண்வீட்டார். காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.