வருடம்தோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா - இங்கிலாந்து அதிரடி!

London Narendra Modi Indonesia Rishi Sunak England
By Sumathi Nov 16, 2022 10:23 AM GMT
Report

ஆண்டுதோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா வழங்க உள்ளதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.

ஜி 20 மாநாடு

ஜி 20 கூட்டமைப்பு நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனோசியாவின் பாலி நகரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள். ஒன்றாக மீள்வோம், வலுவாக மீள்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில்

வருடம்தோறும் 3 ஆயிரம் இந்தியர்களுக்கு கிரீன் விசா - இங்கிலாந்து அதிரடி! | Greenlights 3000 Uk Visas For Indians England

இந்த ஜி 20 மாநாட்டில் உலக நாடுகளில் தலைவர்கள் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர். இதில் கலந்துக்கொள்ள பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார்.

கிரீன் விசா

தொடர்ந்து, இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கும் சந்தித்து பேசினர். அதனையடுத்த சில மணி நேரத்தில் இங்கிலாந்து அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பட்டப்படிப்பு முடித்த 30 வயது வரையிலானவர்கள் இந்த விசாவைப் பெற்று 2 ஆண்டுகள் வரையில் இங்கிலாந்தில் பணியாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.