வாகன ஓட்டிகளுக்கு happy news ; வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க மாநகராட்சி சிறந்த முடிவு!
வாகன ஓட்டிகளுக்கு நிழற் தரும் வகையில் பந்தல் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
வாகன ஓட்டிகள்
அதிகமான வெப்பம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து தற்போது வறண்ட வானிலையை நிலவி வருகிறது. குறிப்பாக காலை 9 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கிறது.வழக்கம்போல் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது.
அதோடு வழக்கத்துக்கு மாறாக தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பஅலையும் வீச தொடங்கி உள்ளது. இந்த கடும் வெயிலில் நடமாடுவது என்பது உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். குறிப்பாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அதிலும் போக்குவரத்து சிக்னல்களில் காத்திருப்பவர்கள் வெயிலில் நிற்க முடியாமல் வேதனைப்பட்டு வருகிறார்கள்.
வதைக்கும் வெயில்
இதனால் வெயில் அதிகமாக இருக்கக்கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணிகளை பல்வேறு மாநகராட்சிகளிலும் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே புதுவை மாநிலத்தில் இத்தகைய பந்தல்கள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
இதை தொடர்ந்து, சென்னையில் உள்ள பிரதனான சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை வலைகள் கொண்டு பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 10 பகுதிகளில் 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பசுமை பந்தல் அமைக்கப்பட உள்ளது