326 பேருடன் சென்னை வந்த விமானம்; லேசர் ஒளியால் பதறிய விமானி - பரபரப்பு!
திடீரென விமானத்தின் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லேசர் லைட் விவகாரம்
துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், 326 பயணிகள் உடன், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தது.

அப்போது சென்னையில் விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, விமானம் தாழ்வாக பறந்து கொண்டிருந்தது. தொடர்ந்து பரங்கிமலை பகுதியில் இருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளி, விமானத்தின் மீது அடிக்கப்பட்டது.
போலீஸார் விசாராணை
இதனால் பதறிய விமானி அடுத்த சில வினாடிகளில் விமானத்தை மேலும் உயரத்தில் பறக்கச் செய்தார். உடனே, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசரமாக தகவல் தெரிவித்தார். பின் ரேடர் கருவினால், அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று ஆய்வு மேற்கொண்டனர்.

சில வினாடிகளில் அந்த ஒளி நின்று விட்டது. சில வினாடிகளில் அந்த ஒளி நின்று விட்டது. இதனையடுத்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கொடுத்த
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.