லாட்டரியில் ரூ.230 கோடி வென்ற சென்னை என்ஜினீயர்
சென்னையை சேர்ந்த இன்ஜினீயரான ஸ்ரீராம் ராஜகோபாலன், கடந்த 1998 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு குடிபெயர்ந்தார்.
அங்கே தனது மனைவி, இரண்டு மகன்களுடன் வசித்து வந்த அவர், பணி ஓய்வு பெற்று சமீபத்தில் நாடு திரும்பினார்.
230 கோடி லாட்டரி பரிசு
லாட்டரி வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்த அவர், அவரது பிறந்தநாளான கடந்த மார்ச் 16-ம் தேதி, ஐக்கிய அரபு அமீரக நாட்டில் டைகெரோஸ் நிறுவனம் நடத்தி எமிரேட்ஸ் டிரா லாட்டரியில் இவருக்கு ரூ.230 கோடி பரிசு கிடைத்துள்ளது.
இது குறித்து பேசிய ஸ்ரீராம் ராஜகோபாலன், "எனக்கு லாட்டரியில் இவ்வளவு பரிசு கிடைத்துள்ளது என்று கூறியபோது நான் முதலில் நம்பவில்லை. இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததில் 70 சதவீதம் மகிழ்ச்சியும், 30 சதவீதம் பயமும் உள்ளது.
இது ஒரு பெரிய தொகை. இதற்கு முன்பு இதுபோன்ற பரிசை நான் பெற்றதில்லை. இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல; இது என் குடும்பம், என் குழந்தைகள் மற்றும் படிக்கும் அனைவருக்கும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
ஒவ்வொரு தந்தையும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கனவு காண்கின்றனர். இப்போது தலைமுறை தலைமுறையாகச் செல்வத்தை உருவாக்க இது வாய்ப்பாக அமைந்துள்ளது.
எனக்கு தொண்டு செயல்களில் ஈடுபாடு உண்டு. கோவில்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் முதல் புற்றுநோய் தொண்டு நிறுவனங்கள் வரை. செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள் நிறைய உள்ளன. மனிதர்கள் சில நேரங்களில் வெற்றிபெறுவதில் வெறித்தனமாக இருப்பார்கள்.
அதிர்ஷ்டம் என்பது எந்தவொரு வரைமுறையையும் பின்பற்றுவதில்லை. அதனால், விளையாடும்போது பொறுப்புடன் இருப்பது நல்லது. முடிந்ததை மட்டும் வாங்குவது, அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை அனுபவிப்பது மட்டுமே இதில் உத்தி" என தெரிவித்துள்ளார்.