திடீரென வைப் ஆகி குத்தாட்டம் போட்ட மூதாட்டி - வைரலாகும் வீடியோ!
வயதை யோசிக்காமல் அசத்தலாக நடனமாடிய மூதாட்டியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடனம்
தற்போது சமூக வலைத்தளங்களில் ஒரு மூதாட்டி நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
அவர் தனது வயதை பற்றி கவலைப்படாமல் வளைந்து, நெளிந்து ஆடும் காட்சிகள் பயனர்களை ஆச்சரியபட வைக்கிறது.

இவ்வளவு வயதில் பலரால் சரியாக நடக்கக்கூட முடியாது. ஆனால் இவர் பாட்டு போட்டதும் வைப் ஆகி துள்ளி குதித்து ஆடியுள்ளார்.
வைரல் வீடியோ
இதனை தொடர்ந்து, இந்த பாட்டி 'மோனிகா ஓ மை டார்லிங்' பாடலுக்கு அசத்தல் நடனமாடுவதை அவருடன் இருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தி வியந்து பார்க்கின்றனர்.
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவை இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் பாட்டியின் நடனத்தை பாராட்டி வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.