வீட்டில் இருப்பது 2 பல்பு, மின்சார பில் வந்தது 1 லட்சம் - மூதாட்டி அதிர்ச்சி!
வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டி வீட்டிற்கு மின்சார பில் 1 லட்சம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மூதாட்டி
கர்நாடக மாநிலம், பாக்யா நகரில் உள்ள கோப்பல் நகரத்தில், சிறிய வீடு ஒன்றில் வசித்து வருபவர் கிரிஜாம்மா. இவருக்கு 90 வயதாகும், இவர் ஒவ்வொரு முறையும் ரூ. 70 அல்லது ரூ. 80 என ரூ. 100 க்கும் குறைவாக தான் மின்சார கட்டணத்தை செலுத்தி வந்திருக்கிறார்.

ஆனால் தற்போது இவருக்கு ரூ.1,03,315 மின்சார கட்டணமாக வந்துள்ளது. ஏற்கனவே வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் இந்த மூதாட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் இது குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மின்சாரத்துறை
இதனை தொடர்ந்து, இந்த சம்பவ குறித்து மின்சாரத்துறை அமைச்சர் கே.ஜே. ஜார்ஜின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து, இதில் நடத்தப்பட்ட விசாரணையில் மீட்டரில் ஏற்பட்ட தவறால் இந்த அதிகமான கட்டணம் வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் சிரமத்திற்கு ஆளான பாட்டி, மின்சார கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்று அமைச்சர் கூறியுள்ளார். பின்னர், இந்த தவறுக்கு மின்வாரிய பணியாளர்களும், ரீடிங் எடுத்தவரும் காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.