பேரனை அடித்த மகன்,மருமகள்...கோபத்தில் துப்பாக்கியால் சுட்ட தாத்தா - அடுத்து நேர்ந்த விபரீதம்!

Attempted Murder India Maharashtra Crime
By Swetha Jul 10, 2024 01:30 PM GMT
Report

பேரனை அடித்த மகன்,மருமகளை தாத்தா துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.

பேரனை அடித்த மகன்

மாகாராஷ்டிர மாநிலம், நாகபூரில் சிந்தாமணி நகரில் குடும்பத்துடன் முதியவர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் பாராளுமன்றத்தில் சிஆர்பிஎப் வீரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது அவர் வங்கியில் பாதுகாப்பு அதிகாரியாக தற்போது வேலை பார்த்து வருகிறார்.

பேரனை அடித்த மகன்,மருமகள்...கோபத்தில் துப்பாக்கியால் சுட்ட தாத்தா - அடுத்து நேர்ந்த விபரீதம்! | Grandfather Gun Shots His Son For Beating Grandson

இந்த நிலையில், இரவு நேரத்தில் 4 வயதான தனது பேரனை மகனும் மருமகளும் அடிப்பதைப் பார்த்து கோபமடைந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, முதியவர் லைசன்ஸ் பெற்று தான் வைத்திருந்த ரைஃபிள் துப்பாக்கியால் மகனை நோக்கி சுட்டிருக்கிறார்.

விரும்பிய பெண் காதலை ஏற்க மறுப்பு  பெண்ணின் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞரால் பரபரப்பு!

விரும்பிய பெண் காதலை ஏற்க மறுப்பு பெண்ணின் வீட்டை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞரால் பரபரப்பு!

நேர்ந்த விபரீதம்

இதனால் மகனின் காலில் குண்டு பாய்ந்தது. இந்த சம்பவம் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்த நிலையில், இது குறித்து புகார் அளித்தனர். இந்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முதியவரை கொலை முயற்சி வழக்கில் கைதுசெய்துள்ளனர்.

பேரனை அடித்த மகன்,மருமகள்...கோபத்தில் துப்பாக்கியால் சுட்ட தாத்தா - அடுத்து நேர்ந்த விபரீதம்! | Grandfather Gun Shots His Son For Beating Grandson

காலில் குண்டு பாய்ந்த அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலம் பெற்றார். மகனை தந்தையே துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.