25 வயசாச்சு இன்னும் திருமணம் செய்து வைக்கல - கோபத்தில் பாட்டியை கொன்ற பேத்தி

Cuddalore Crime
By Karthikraja Jul 01, 2024 04:05 AM GMT
Report

திருமணம் செய்து வைக்காத விரக்தியில் பாட்டியை பேத்தியே கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பேரளையூரை சேர்ந்தவர் தனலட்சுமி(வயது 70). இவரது மகன் பன்னீர்செல்வம். இவரது மனைவி புஷ்பவல்லி. இவர்களுக்கு சிவக்குமார் என்ற மகனும், சிவரஞ்சனி, சிவசத்யா என்ற 2 மகள்களும் உள்ளனர். 

25 வயசாச்சு இன்னும் திருமணம் செய்து வைக்கல - கோபத்தில் பாட்டியை கொன்ற பேத்தி | Grand Daughter Kills Grandma Unmarried Angry

பன்னீர்செல்வம் 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அவரது மகன் சிவக்குமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். முதல் பேத்தியான சிவரஞ்சனி திருமணமாகி கருவேபிலங்குறிச்சியில் வசிக்கிறார். 25 வயதான சிவசத்யா திருமணமாகாமல் தாய் புஷ்பவள்ளி மற்றும் பாட்டி தனலட்சுமியுடன் வசித்து வந்தார். 

கந்தர்வக்கோட்டையில் ஒரு கள்ளக்காதல் - குஷியில் திரும்பி சென்ற கணவர்

கந்தர்வக்கோட்டையில் ஒரு கள்ளக்காதல் - குஷியில் திரும்பி சென்ற கணவர்

கொடூரத் தாக்குதல்

தந்தை சிவக்குமார் இறந்துபோனதும் சிவசத்யா மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிவசத்யா இன்னும் ஏன் எனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என பாட்டி தனலட்சுமியிடம் வாக்குவாதம் செய்துவந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை சிவசத்யாவும் பாட்டியும் வீட்டில் தனியாக இருந்தபோது இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சிவசத்யா, அருகில் இருந்த இரும்புக்கம்பியால் பாட்டி தனலட்சுமியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். கொடூரத் தாக்குதலில் பாட்டி தனலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

மிரட்டல் 

பின் சிவசத்யா பக்கத்து வீட்டில் இருந்த தாய் புஷ்பவள்ளியிடம் சென்று பாட்டியைக் கொன்றுவிட்டேன் என சொல்லியிருக்கிறார். அலறி அடித்துக்கொண்டு வீடுக்கு ஓடிவந்த புஷ்பவள்ளி தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

girl crying

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, தனலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் சிவசத்யாவிடம் விசாரிக்க முயன்றபோது, "நான் தான் பாட்டியைக் கொன்றேன். யாராவது என் கிட்டே வந்தால் தற்கொலை செய்துகொள்வேன்" என மிரட்டியுள்ளார்.

இதனால், போலீசார் சிவசத்யாவை கைது செய்யாமல் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இதுகுறித்து, கருவேபிலங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.