அடிக்கடி UPI பயன்படுத்துவீங்களா? முக்கிய மாற்றம் - அவசியம் நோட் பண்ணுங்க!
UPI கட்டணம் தொடர்பான புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது.
UPI கட்டணம்
UPI கட்டணம் தொடர்பான புதிய விதிகள் ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
என்னவென்றால், இந்திய ரிசர்வ் வங்கி UPI பரிவர்த்தனை மற்றும் வாலட் மூலம் பணம் செலுத்துவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய விதி
UPI 123Pay பயன்படுத்தி 5000 ரூபாய்க்கு பதிலாக 10000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். இதனால் PhonePe, UPI மற்றும் Paytm போன்றவற்றை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மக்கள் எளிதாக செய்து கொள்ள முடியும்.
இந்த புதிய விதியை முழுவதுமாக பயன்படுத்த, குறிப்பிட்ட வாலட் KYC நடைமுறையை முடித்திருக்க வேண்டும். மேலும் வாலட்டுடன் ஆப் இணைக்க வேண்டும்.
UPI மூலம் பணம் செலுத்த OTP அவசியம் என்ற விதியை நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) அமல்படுத்துகிறது. ஆர்பிஐயின் இந்த புதிய விதிகள் மூலம் மக்கள் அதிக பணத்தை அனுப்பி கொள்ளலாம்.