AUDI கார் பிரியர்களுக்கு ஷாக் அறிவிப்பு - நிறுவனமே சொன்ன தகவல்!
Germany
Audi
By Sumathi
4 months ago

Sumathi
in தொழில்நுட்பம்
Report
Report this article
ஆடி கார்களின் விலை உயரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி கார்
ஜெர்மனைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் ஆடி. இது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆடி கார்களின் விலை வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் 3 சதவிகிதம் உயரப்போகிறது.
நிறுவனம் மற்றும் டீலர்களின் சீரான வளர்ச்சிக்கு இந்த விலை ஏற்றம் அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பால்பிர் சிங் திலான்,
விலை உயர்வு
வாடிக்கையாளர்களை பாதிக்காத வகையில் சிறிய அளவிற்கே விலையை உயர்த்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக BMW இந்தியா நிறுவனமும் தங்கள் தயாரிப்புகளின் விலையை 3 சதவிகிதம் வரை உயர்த்தப்போவதாக அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.