குக் வித் கோமாளியிலிருந்து விலகிய ஜிபி முத்து - அதிர்ச்சி காரணம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து விலகவுள்ளதாக பேசப்படுகிறது.
குக் வித் கோமாளி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது 'குக் வித் கோமாளி’. இந்த நிகழ்ச்சியில் 3 சீசன்கள் வெற்றிகரமாக நடந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில், குக்குகளாக ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, ஷிவாங்கி, விஜே விஷால், காளையன், விசித்ரா, அண்ட்ரின் நெளரிகட், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களில் கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா ஆகியோர் வெளியேறிய நிலையில் மணிமேகலையும் வெளியேறினார்.
ஜிபி முத்து விலகல்?
இந்நிலையில், ஜிபி முத்துவும் விலக உள்ளதாக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது. இதுகுறித்து பேசிய அவர், நான் மருத்துவமனையில் இருந்து டிஸ்டார்ச் ஆகி விட்டாலும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். இந்த மாத இறுதியில் சூட்டிங்கில் என்னை கூப்பிட்டால் நான் கலந்து கொள்வேன்.
ஏற்கனவே அதிகமாக ரெஸ்ட் இல்லாமல் நான் ஓடிக்கொண்டே இருந்ததால் தான் என்னுடைய உடல்நிலை பாதிப்பாகிவிட்டது. அதனால் இனி அப்படி ஒரு தப்பை செய்ய மாட்டேன். அங்கே நாங்கள் ஜாலியாக பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்போம்.
சூட்டிங் ஸ்பாட்டில் கூட மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். ஆனால் ரெஸ்ட் இல்லாமல் அடிக்கடி சுத்திக்கொண்டே இருப்பதால் என்னுடைய உடல் சோர்வாகி விட்டது. அந்த நிலையில் தான் மருத்துவமனையில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனத் தெரிவித்துள்ளார்.