இனி 6 மணி நேரம் மட்டும்தான் பள்ளிகள் செயல்படும் - அரசு அதிரடி!

Bihar
By Sumathi Feb 21, 2024 05:41 AM GMT
Report

அரசு நடத்தும் பள்ளிகள் 6 மணி நேரம் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரம் மாற்றம்

பீகாரில் செயல்படும் பள்ளிகளின் நேரம் தற்போது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 8 மணி வரையாக உள்ளது. இதில், அரசு நடத்தும் பள்ளிகளின் நேரத்தை 6 மணி நேரமாக குறைக்க அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

bihar school

அதன்படி, பள்ளிகள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, இதுகுறித்த அறிவிப்பை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சட்டப் பேரவையில் வெளியிட்டார்.

பீகாரில் பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் வயிற்றில் கரு - அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள்

பீகாரில் பிறந்து 40 நாட்களே ஆன பச்சிளங் குழந்தையின் வயிற்றில் கரு - அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள்


அரசு நடவடிக்கை

ஆனால், இந்த அறிவிப்பை எதிர்த்து எதிர்க்கட்சியினர் பேரவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அப்போது நிதிஷ்குமார், நான் உடனடியாக துறையின் தகுதிவாய்ந்த அதிகாரியை அழைத்து நேரங்களை மாற்றும்படி அறிவுறுத்துவேன்.

cm nithish kumar

நீங்கள் (எதிர்க்கட்சி உறுப்பினர்கள்) என்னிடம் முன்பே சொல்லியிருக்க வேண்டும். இப்போது புதிய நேரங்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும்” எனத் தெரிவித்தார்.