மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்...பள்ளி நேரத்தில் அதிரடி மாற்றம் - வெளியான முக்கிய அறிவிப்பு!
அரசு பள்ளிகளில் வரும் 15 ம் தேதி முதல் இரண்டு இடைவேளை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி நேரம்
புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து, காலை 8.45 மணிக்கு பதிலாக, காலை 9 மணிக்கு பள்ளிகள் துவங்கும். மாலை 4 மணிக்கு பதிலாகமாலை 4:20 மணிக்கு பள்ளி வகுப்புகள் நிறைவு பெறும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில், காலை 9 மணிக்கு பள்ளிகள் துவங்கி 15 நிமிடம் அசெம்பிளி நடைபெறும்.
முக்கிய அறிவிப்பு
முதல் பாடம் காலை 9.15க்கு துவங்கி பத்து மணிக்கு நிறைவு பெறும். இரண்டாவது பாடம் பத்து மணிக்கு துவங்கி 10.45 மணிக்கு முடிவடையும். இடைவேளை10.45 மணி முதல் 10.55 வரை விடப்படுகிறது. அடுத்து மூன்றாவது பாடம்10.55 மணி முதல் 11.40 வரையும், 11:40 முதல் 12.25 வரை நான்காவது பாடம் நடைபெறும்.
அதன்பிறகு, உணவு இடைவேளை 12.25 முதல் 1.30 வரை விடப்படுகிறது. உணவு இடைவெளி தொடர்ந்து மதியம் 1:30 முதல் 2.10 வரை ஐந்தாவது பாடம், 2.10 முதல் 2.50 வரை ஆறாவது பாடம் நடத்தப்படும்.
இரண்டாவது இடைவேளை மதியம் 2:50-லிருந்து 3 மணி வரை விடப்படுகிறது.மேலும், மதியம் மூன்று மணி முதல் 3.40 வரை ஏழாவது பாடம், 3.40 முதல் 4.20 வரை எட்டாவது பாடம் என விடப்படுகிறது.