மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் ; பள்ளிக்கல்வித் துறை விடுத்த இறுதி எச்சரிக்கை!

Governor of Tamil Nadu Summer Season School Incident
By Swetha May 04, 2024 07:33 AM GMT
Report

அதிகமான வெப்பம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை

வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து தற்போது வறண்ட வானிலையை நிலவி வருகிறது. குறிப்பாக காலை 9 மணிக்கே வெயில் வாட்டி வதைக்கிறது. வழக்கம்போல் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. அதோடு வழக்கத்துக்கு மாறாக தமிழ்நாட்டின் பல இடங்களில் வெப்பஅலையும் வீச தொடங்கி உள்ளது.

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் ; பள்ளிக்கல்வித் துறை விடுத்த இறுதி எச்சரிக்கை! | Department Education Gave Good News Students

இந்த கடும் வெயிலில் நடமாடுவது என்பது உடலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் ஆகியோர் இணைந்து அனைத்து பள்ளிகளுக்கும் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.

சுட்டெரிக்கும் கோடை வெயில் ; 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

சுட்டெரிக்கும் கோடை வெயில் ; 19 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

இறுதி எச்சரிக்கை

அதில், “தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் ; பள்ளிக்கல்வித் துறை விடுத்த இறுதி எச்சரிக்கை! | Department Education Gave Good News Students

கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.