அடுத்த 5 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamil nadu TN Weather Weather
By Jiyath Apr 30, 2024 09:38 AM GMT
Report

அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அதிகபட்ச வெப்பநிலை 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் "தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. 

அடுத்த 5 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Heat Will Increase In Tamil Nadu

வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில், ஒரு சில இடங்களில் மே 1-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக காணப்படும்.

மே 2 மற்றும் 3-ம் தேதிகளில், தமிழக வட உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில், 39 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை (102.2 முதல் 109.4 டிகிரி வரை) பதிவாகும்.

லேசான மழை

மேலும் வெப்ப அலையும் வீசும். அதேநேரம், தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, மே 1-ம் தேதி வரை, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

அடுத்த 5 நாட்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! | Heat Will Increase In Tamil Nadu

மற்ற தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும். மே 2-ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மே 3-ம் தேதி முதல் மே 5-ம் தேதி வரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.