13 அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குடுத்த ஆசிரியர் - அதிர்ச்சி சம்பவம்!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாஜான்பூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக பணியாற்றும் முகமது அலி என்பவர் , மாணவிகளிடம் ஆபாச செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவிகளை அவர் தாக்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கு சஜியா என்ற ஆசிரியையும் அவரின் இந்த செயலுக்கு உதவியுள்ளார். இது குறித்து அந்த மாணவிகள் தனது வகுப்பு ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.
அவர் உடனடியாக போலீஸ் மற்றும் அந்த கிராம மக்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் கிராம மக்கள் அவரை அடித்து வெளுத்தனர், பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணை
இதனை தொடர்ந்து, போலீசார் அந்த மாணவிகளிடம் தனி தனியாக விசாரித்து ரகசிய வாக்குமூலம் பெற்றனர்.
அவர் பாலியல் தொல்லை குடுத்தது உறுதி செய்யப்பட்டது, வாக்குமூலத்தின் அடிப்படையில் பள்ளியின் கழிவறையில் சோதனை செய்கையில் அதில் இந்த சம்பவம் தொடர்பான சில பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
மேலும், இச்சம்பவம் குறித்து காவல் துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் பாஜ்பாய், " முகமது அலி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் நேற்று அடைக்கப்பட்டுள்ளார்.
உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியை சஜியா, பள்ளியின் தலைமை ஆசிரியர் அனில்குமார் ஆகியோர் மீது வழககு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அமைச்சர் பல்தேவ் சிங் அவுலாக் உறுதியளித்துள்ளார்.